ஆப்நகரம்

சசிகலாவின் புகழ்பாடி பட்ஜெட் தொடங்கிய ஜெயக்குமார்!

தமிழக பட்ஜெட் 2017 இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.

TNN 16 Mar 2017, 10:58 am
சென்னை : தமிழக பட்ஜெட் 2017 இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.
Samayam Tamil jayakumar start budget speech with sasikala name
சசிகலாவின் புகழ்பாடி பட்ஜெட் தொடங்கிய ஜெயக்குமார்!


பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை கவிதை போல் வாசித்தார். அதன்பின், சிறை சென்ற சசிகலா, அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

சசிகலா, தினகரன் பெயரை ஜெயக்குமார் குறிப்பிட்டதும் எதிர்கட்சியினர் சபையில் கூச்சல் எழுப்பினர். தண்டனை பெற்று சிறை சென்றவரை பற்றி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஏன் குறிப்பிட வேண்டும்.

ஆட்சியிலும் சரி சட்டமன்றத்திலும் சரி எந்தளவும் உறுப்பினராக இல்லாதவர்களின் பெயரை குறிப்பிடுவது தவறு என திமுக, ஓபிஎஸ் அணியினர் கூச்சலிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்