ஆப்நகரம்

ஆர்.பி.ஐ வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

RBI Recruitment 2019: ஆர்.பி.ஐ வங்கியில் கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Samayam Tamil 16 Oct 2019, 12:14 am
ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil RBI Recruitment 2019


வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: RBI Recruitment 2019:
1நிறுவனம்ரிசர்வ் வங்கி RBI
2அமைப்புமத்திய அரசு
3அதிகாரப்பூர்வ இணையதளம்rbi.org.in
4பணிகிரேடு பி
5பணி முறைநிரந்தரம்
6பணியிடம்நாடு முழுவதும்
7காலியிடங்கள்199
8கல்வித்தகுதிமுதுநிலை பட்டம்
9விண்ணப்பம் தொடங்கிய நாள்20 செப்டம்பர் 2019
10விண்ணப்பம் முடியும் நாள்11 அக்டோபர் 2019
11விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
12தேர்வு நடைபெறும் நாள்நவம்பர் 2019

RBI Recruitment 2019:
நாட்டில் உள்ள வங்கிகளுக்கு எல்லாம் முதன்மையான வங்கியான, ஆர்.பி.ஐ.,யில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 199 கிரேடு ‘பி’ பணிக்கான இடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் opportunities.rbi.org.in என்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது. அதாவது விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 11 ஆம் தேதியாகும். இதனால், கிரேடு ‘பி’ பணிக்கு விண்ணப்ப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே ஆன்லைன் வழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும். இதற்காக தமிழகம் உட்பட நாட்டின் எல்லா இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.ஐ கிரேடு ‘பி’ பணிக்கான தேர்வு பாடத்திட்டங்கள், கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
https://www.rbi.org.in/scripts/Bs_viewcontent.aspx?Id=3766

அடுத்த செய்தி