ஆப்நகரம்

ஈரோட்டில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 8, 2019 முதல் ஆகஸ்ட் 7, 2019 வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 8ஆம் தேதி அட்மிட் கார்டு ஆன்லைனில் வெளியிடப்படும்.

Samayam Tamil 11 Jul 2019, 5:05 pm
இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
Samayam Tamil 4_1499423692


இந்தியா ராணுவம் நாடு முழுவதும் பல நகரங்களில் ஆள் சேர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 வரை ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க்ஃஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தின் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 8, 2019 முதல் ஆகஸ்ட் 7, 2019 வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 8ஆம் தேதி அட்மிட் கார்டு ஆன்லைனில் வெளியிடப்படும். முகாமுக்கு வரும்போது அட்மிட் கார்டு மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்துவர வேண்டும். பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆவணப் பரிசோதனை நாள் மற்றும் நேரம், உடற்தகுதித் தேர்வு, உடல் அளவீடு செய்வதற்கான நாள் ஆகியவை குறித்து அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் நாட்களில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கும்.

அக்டோபர் 1,2019 தேதியில் 18 வயதுக்குக் குறைவாக இருப்பவர்களும் இதில் பங்கேற்கலாம். ஆனால், பெற்றோரின் ஒப்புதல் சான்றிதழுடன் வரவேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் உண்டு.

கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாக்கலாம்.
Official Notification for Army Recruitment Rally 2019 in Erode, VOC Park, from August 22 to September 2

அடுத்த செய்தி