ஆப்நகரம்

மத்திய அரசில் 9 ஆயிரம் செவிலியர் காலிப் பணியிடங்கள்

விண்ணப்பிப்பவர்கள் ஜி.என்.எம். எனப்படும் பேறுகால மருத்துவத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்பை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

Samayam Tamil 25 Jul 2019, 4:49 pm
பீகாரில் உள்ள மத்திய தொழில்நுட்ப சேவை ஆணையத்தில் 9 ஆயிரத்துக்கு அதிகமான செவிலியர் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
Samayam Tamil bsrt-recruitment-1280x720


மத்திய அரசின் கீழ் செயல்படும் பீகார் தொழில்நுட்ப சேவை ஆணையத்தில் நர்ஸ் (Staff Nurse) மற்றும் ட்யூட்டர் (Tutor) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நர்ஸ் பணிக்கு 9130 பேரும் ட்யூட்டர் பணிக்கு 169 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 9299 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆள் சேர்ப்பு நடத்தப்படுகிறது.

இந்தப் பணியில் சேர தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் https://www.pariksha.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

நர்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜி.என்.எம். எனப்படும் பேறுகால மருத்துவத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்பை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.

ட்யூட்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பணிகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 இருக்க வேண்டும். ஆண்களுக்கு அதிகபட்சமாக 37 வயது வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 40 வயது ஆகியிருக்கலாம்.

எஸ்.சி.,/எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு. எஸ்.சி.,/எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு கிடைக்கும்.

கட்டணம்

பொதுப்பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.200. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கிய நாள் – ஜூலை 25, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – ஆகஸ்ட் 26, 2019

இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் தகவல்களை அறிய கீழ்க்காணும் இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.
https://cdn.tamilanjobs.com/wp-content/uploads/2019/07/BTSC-staff-nurse.pdf

இந்தப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க,
http://pariksha.nic.in/Agencies.aspx?KZhCrm9B4QPkl0gO2rAMuw==

அடுத்த செய்தி