ஆப்நகரம்

BSF Constable Post Vacancy: 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை!!

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

Samayam Tamil 18 Apr 2019, 12:21 pm
எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
Samayam Tamil bsf

Syndicate Bank: அதிகாரி வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!
நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை
அமைப்பு: மத்திய அரசு
பதவி: தலைமைக் காவலர்- ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக்
காலியிடங்கள்:
ரேடியோ மெக்கானிக் – 772
ரேடியோ ஆபரேட்டர் – 300
மொத்த காலியிடங்கள்: 1,072
SBI: வங்கியில் 8653 கிளார்க் வேலை!
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ படிப்பு

வயது வரம்பு: 18 முதல் 25 வயது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு
சம்பளம்: மாதம் 25,500 ரூபாய் முதல் 81,000 ரூபாய் வரை.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.bsf.nic.in
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைன் முகவரி: http://bsf.nic.in/en/recruitment.html
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14 மே 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஜூன் 2019
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசிபிரிவினருக்கு 100 ரூபாய்
இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்குவிண்ணப்பக் கட்டணம் கிடையாது
இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், மே 14ம் தேதிக்குப் பிறகு http://bsf.nic.in/en/recruitment.html என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:
http://bsf.nic.in/en/recruitment.html

அடுத்த செய்தி