ஆப்நகரம்

Madras IIT: சென்னை ஐஐடியில் பல்வேறு விதமான வேலைகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

மெட்ராஸ் ஐஐடி.,யில் காலியாக உள்ள தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 5 Oct 2019, 3:15 pm
சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி கல்விநிறுவனத்தில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil Madras IIT


இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சூப்பிரண்டு இன்ஜினியர், சீனியர் டெக்னிக்கல் ஆபீசர், ஃபயர் ஆபீசர் என பல்வேறு விதமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியான படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வித்தகுதி, வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பணி 1. சூப்பிரண்டு இன்ஜினியர்
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் M.E/M.Tech படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E/B.Tech படிப்புடன் துறை சம்பந்தப்பட்ட பிரிவில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி 2: துணை பதிவாளர்
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், உதவி பதிவாளராக 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி 3: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 4
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சைன்ஸ், ECE, EEE ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் M.E/M.Tech பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும், டெக்னிக்கல் ஆபீசராக 5 வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி 4: ஃபயர் ஆபீசர்
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
காலியிடங்கள்: 1
தீ விபத்து பாதுகாப்பு பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், துறை சம்பந்தப்பட்ட பிரிவில் 15 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

பணி 5: செக்யூரிட்டி ஆபீசர்
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 வருடம் பணி அனுபம் இருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி 6: அசிஸ்டெண்ட் எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினியர்
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ECE/CSE அல்லது அதற்கு இணையான பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்

பணி 7: ஸ்போர்ட்ஸ் ஆபீசர்
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: உடற்கல்வி துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். ஹாக்கி, தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, பேட்மிண்டன் ஆகிய ஏதேனும் ஒரு விளையாட்டில் நன்கு தேர்ச்சியடைந்தவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு உரியக் கல்வித்தகுதி, மற்ற தகுதிகள் உள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து நவம்பர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய் ஆகும்.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்குச் சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
http://recruit.iitm.ac.in/sites/default/files/R319-Instructions.pdf

அடுத்த செய்தி