ஆப்நகரம்

கல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு!

IGCAR Recruitment 2019: கல்பாக்கம் அணு சக்தி துறையில் (Kalpakkam Atomic Energy Station) பார்மசிஸ்ட், டெக்னீசியன் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Nov 2019, 2:56 pm
IGCAR Recruitment 2019: கல்பாக்கம் அணு சக்தி துறையில் (Kalpakkam Atomic Energy Station) பார்மசிஸ்ட், டெக்னீசியன் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kalpakkam igcar recruitment 2019 apply online for pharmacist technician jobs in atomic power station
கல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு!


அணு சக்தி துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு சக்தி துறை நிறுவனத்தில் (Department of Atomic Energy DAE), சிவில் செக்ஷன், DAE ஹாஸ்பிட்டல் ஆகியவற்றில் டெக்னீசியன், பாரமஸிஸ்ட் ஆகிய பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும், வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை விரிவாக இங்கு காணலாம்.

பதவி 1: டெக்னீசியன்

டெக்னீசியன் பி, (சுகாதார ஆய்வாளர்) பணிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஒரு வருடம் சுகாதார ஆய்வு (Sanitary Inspection) சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 27,495 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் பணிக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும். இந்த பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், உரிய விண்ணப்படிவம், அசல்கல்விச்சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பதவி 2: பார்மசிஸ்ட்

பார்மசிஸ்ட் எனப்படும் மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பார்மஸி பிரிவில் பட்டயப்படிப்பு (Diploma) படித்திருக்க வேண்டும். மேலும், ஆறு மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதனை பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மாதம் 36,270 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இது தவிர 2,336 ரூபாய் HRA படிகளும் உண்டு. பார்மசிஸ்ட் பணிக்கானநேர்முகத்தேர்வு, நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. பார்மஸிஸ்ட் படித்தவர்கள் நேரடியாக தங்களது கல்விச்சான்றிதழ்கள், விண்ணப்பப்படிவத்துடன் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தற்காலிக பணி:

மேற்கண்ட பார்மசிஸ்ட், டெக்னீசியன் ஆகிய இரண்டு பதவிகளும் தற்காலிகமானதாகும். இருப்பினும் ஒப்பந்த காலம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த பணி அனுபவம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். மேலும், அடுத்தடுத்து இதே துறையிலும் வேலைவாய்ப்புகள், நிரந்தர பணிக்கான வாய்ப்புகளும் உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்பப்படிவம் http://www.igcar.gov.in/gso/ என்ற இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பதரர்கள் அதனை பெற்று,பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அணுசக்தித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

IGCAR Recruitment 2019: Pharmacist & Technician [Sanitary Inspector) Notification

அடுத்த செய்தி