ஆப்நகரம்

கப்பல் கட்டுமான தளத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மும்பையில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமான தளத்தில் பல்வேறு பணிகளை நிரப்புவதற்கு ஐடிஐ படித்து முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Samayam Tamil 9 Sep 2019, 3:54 pm
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேவல் யார்டு (Naval Dockyard)எனும் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது ஃபிட்டர், மெக்கானிஸ்ட், வெல்டர், டெய்லர், பெயிண்டர் என ஏராளமான பணிக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அந்தந்த துறையில் ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil MUMBAI NAVAL YARD


ஓராண்டு பயிற்சியில் மொத்தம் 855 காலிபணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இரண்டு ஆண்டு பயிற்சி வாய்ப்பில் 78 இடங்கள் நிரப்ப்படுகிறது. அதிகபட்சமாக எலக்ட்ரிசியன் பணிக்கு 198 இடங்களும், பிட்டர் பணிக்கு 141 இடங்களும் உள்ளது. வகுப்பு வாரியான காலியிடங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், ஆயுதப்படை வீரர்கள் குடும்பத்தினருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 1 ஏப்ரல் 1999 முதல் 31 மார்ச் 2006க்குள் பிறந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், ஐடிஐ,யில் அந்தந்த துறை ரீதியான படிப்பும் படித்திருக்க வேண்டும். கிரேன் ஆபரேட்டர், ரிக்கர் ஆகியவற்றுக்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஐடிஐ படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு மும்பையில் மட்டுமே நடக்கும். தேர்வு தேதி, நேரம், தேர்வு மையம் ஆகியவை விண்ணப்பதாரர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் அவ்வபோது இமெயில் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுதத்தப்படுகிறார்கள். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். மொத்தம் 2 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள், www.bhartiseva.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அறிவிப்பு விளம்பரம் வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு கப்பல் கட்டுமான தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
https://dbsmedia.s3-us-west-2.amazonaws.com/DEO_AB/Advertisement_IT-23.pdf

அடுத்த செய்தி