ஆப்நகரம்

மத்திய அரசின் NIC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!

NIC Recruitment 2020: மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தில் ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 28 Mar 2020, 7:28 pm
NIC எனப்படும் தேசிய தகவல் மையத்தில் (National Informatic Centre), காலியாக உள்ள சுமார் 500 ஆராய்ச்சியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியிருந்தது. இதற்கு பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil NIC Recruitment 2020


இந்த நிலையில், தற்போது விண்ணப்பதாரர்களின் நலன் கருதி NIC பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.


முக்கிய நாட்கள்:
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 26 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 ஏப்ரல் 2020

காலியிடங்கள் விவரம்:
ஆராய்ச்சியாளர் (Scientist) பணிக்கு 288 காலியிடங்ளும், தொழில்நுட்ப உதவியாளர் (Scientific / Technical Assistant) பணிக்கு 207 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி:
சைன்டிஸ் ‘பி’ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பி.இ, அல்லது பி.டெக் முடித்தவராக இருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MSC, MS, MCA, B.E, B.Tech இவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
26.3.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SC/ST பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், OBC பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், Calicut.nielit.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தேசிய தகவல் மையம் recruitment.nic.in வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
https://www.calicut.nielit.in/nic/

அடுத்த செய்தி