ஆப்நகரம்

தமிழகத்திற்கு அதிர்ச்சியூட்டிய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்; 10 ஆண்டுகளில் இல்லாத சரிவு!

2018ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதி முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 10:11 pm
யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளில், நடப்பாண்டு தமிழகத்தில் இருந்து 35 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தமிழகத்திற்கு மிக மோசமான தேர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil UPSC Exam


ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் வெற்றியாளர்களை பெற்று வந்த மாநிலமாக தமிழகம் இருந்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் நிலைமை வேறாக இருக்கிறது. நாடு முழுவதும் சிவில் சர்வீஸில் 759 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இதற்கு தமிழகத்தில் இருந்து 35 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவொரு மோசமான செயல்பாடு என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு 990 காலியிடங்கள் இருந்தன. அதற்கு தமிழகத்தில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நடப்பாண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்தவர் சி ஏ ரிஷப். இவர் ஒட்டுமொத்த பட்டியலில் 23வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கடுத்து 49வது இடத்தில் ரெஞ்சினா மேரி வி, 79வது இடத்தில் வி அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி