ஆப்நகரம்

SSC MTS Notification: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 8 ஆயிரம் காலியிடங்கள்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2019, 12:07 pm
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil ssc


மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது எம்.டி.எஸ் எனப்படும் 8 ஆயிரம் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணிக்கு எதிர்நோக்கி தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வருமாறு:
(TNPSC: அசிஸ்டண்ட் ஆபீசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!)
நிறுவனம்: பணியாளர்கள் தேர்வாணையம் (SSC- Staff Selection Commission)
அமைப்பு: மத்திய அரசு
பதவி: உதவியாளர்கள்
மொத்த காலியிடங்கள்: 8,000
பணியிடம்: நாடு முழுவதும்
வயது வரம்பு: 18 – 25 குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.nic.in/
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைன் முகவரி: https://ssc.nic.in/Portal/Apply
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 22 ஏப்ரல் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 மே 2019
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஓபிசிபிரிவினருக்கு 100 ரூபாய்
இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
(எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை! விண்ணப்பிக்க இன்றே கடைசி!!)
ஆன்லைன் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 31 மே 2019
வங்கி செலான் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 1 ஜூன் 2019
(10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை!
சம்பளம்: 5,200 முதல் 20,200 ரூபாய்
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
முதல்நிலைத் தேர்வு தேதி: 02.08.2019 to 06.09.2019
இரண்டாம் நிலைத் தேர்வு தேதி: 17.11.2019
இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், https://ssc.nic.in/Portal/Apply என்ற தளத்தில் லாகின் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து மே 29ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எஸ்.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf

அடுத்த செய்தி