ஆப்நகரம்

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. தமிழகத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தென்னிந்திய பிரிவு அலுவலகத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 19 Sep 2019, 3:58 pm
பாதுகாப்பு அமைச்சகத்தின் தென்னிந்திய பிரிவில் செளகிதார், டிரைவர், லேபர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு பத்தாம் வகுப்பு படித்த திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil army selection


பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 'தக்ஷின் பாரத் ஏரியா' தலைமை அலுவலகத்தில் பல்வேறு பணிகள் நிரப்பபடுகிறது. தென்னிந்தியா என்பது தான் 'தக்ஷின் பாரத்' என்பதாகும். இங்கு டின் ஸ்மித், லேபர், செளகிதார், டிரைவர் ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. டின்ஸ்மித் (ஸ்கில்டு), டிரைவர் ஆகிய பணிகளுக்கு தலா 1 இடமும், லேபர், செளகிதார் ஆகிய பணிகளுக்கு தலா இரண்டு காலியிடங்களும் உள்ளது. இதில் டிரைவர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவர். மற்ற பணியிடங்கள் பெங்களூரு உள்ள அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. லேபர், செளகிதார் ஆகியவற்றுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 25 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 27 வயதும், டின்ஸ்மித் பணிக்கு 28 வயதும் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள்..!

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள், மதிப்பெண் விபரங்கள் விரிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமான தளத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை...

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், செப்டம்பர் 14 தேதியிட்ட எம்பிளாய்மண்ட் சர்வீஸ் செயத்தித்தாளில் பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் அக்டோபர் முதல் வாரத்திற்குள்ளாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்பும் போது, விண்ணப்பதார்கள் தங்களுடைய அத்தாட்சி பெற்ற கல்விச்சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தக்ஷின் பாரத் ஏரியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
https://drive.google.com/file/u/1/d/1wSolbORlbooOsczIHU0B05I3IFo0C3jK/view?usp=drive_open
https://drive.google.com/file/u/1/d/1wSolbORlbooOsczIHU0B05I3IFo0C3jK/view?usp=drive_open

அடுத்த செய்தி