ஆப்நகரம்

TNPSC GROUP 3A தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

ஜனவரி 28-ம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III தொகுதி-3A பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வர்கள் தங்கள் அட்மிட் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

Authored byசுபாஷ் சந்திர போஸ் | Samayam Tamil 20 Jan 2023, 9:31 pm
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III தொகுதி-3A பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 28-ம் தேதி காலை நடைபெறுகிறது.
Samayam Tamil TNPSC GROUP 3A hall ticket


இதற்கான அறிவிப்பு கடந்த 15.9.2022 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.

Group 3A ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக லாகின் செய்யவும்.
  • பின், ஹால்டிக்கெட் அறிவிப்பை க்ளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
  • பிறகு, புதிய டேபில் உங்கள் ஹால்டிக்கெட் கிடைக்கும். அதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
எழுத்தாளர் பற்றி
சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் கடந்த நான்கு வருடங்களாக ஊடகத்துறையின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் கான்டென்ட் எழுதுபவராகவும் மற்றும் செய்தி நிறுவனங்களில் கள நிருபராகவும் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இயல்பில் எந்த துறை சார்ந்து எழுதும் ஆர்வம் கொண்ட சுபாஷ் தற்போது கல்வி, ஆரோக்கியம், உறவுகள் குறித்து எழுதி வருகிறார். அரசியல் மற்றும் உறவுகள் குறித்த துறையில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு lepidopterist, bibliophile மற்றும் anthophile ஆவார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி