ஆப்நகரம்

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்

Samayam Tamil 18 Feb 2020, 3:19 pm
Namakkal Child Protection Unit: நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்
Samayam Tamil namakkal child protection unit invites application for various posts recruitment 2020
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பிப்ரவரி 14 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்..

மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 1, சமூகப்பணியாளர் -1, உதவியாளர் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – 3 ஆகும். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள், தற்காலிக பணியிடம் என்று பாராமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.


​Child Protection Officer Recruitment 2020

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சமூகப் பணியாளர்:
சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் ஆகிய ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்திருக்க வேண்டும். சமூகப்பணியாளர் பதவிக்கு மாதம் 14,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில்,
மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001.

அடுத்த செய்தி