ஆப்நகரம்

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் வேலைவாய்ப்பு 2020. அப்ளை பண்ண மறந்துடாதிங்க!

2020ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழுவிபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

Samayam Tamil 27 Aug 2020, 4:05 pm
TNCSCல் ஆட்சேர்ப்பு 2020 அறிவிக்கப்பட்டுள்ளது: 127 விற்பனையாளர் மற்றம் பாக்கர் வேலைகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC)- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மற்றும் தேனியில் விற்பனை நபர் மற்றும் பாக்கரின் 127 பதவிகளை நிரப்ப முடிவு செய்துள்ளது. 10 மற்றும் 12 வகுப்பு படித்தோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 29 மற்றம் செப்டம்பர் 25 2020. இது தமிழ்நாடு அரசு வழங்கிய சிறப்பு வேலைவாய்ப்பு. விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை காலக்கெடுவிற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் சமர்பிக்கவும்.
Samayam Tamil தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் வேலைவாய்ப்பு 2020. அப்ளை பண்ண மறந்துடாதிங்க!


பணி குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்Tamilnadu Civil Supplies Corporation (TNCSC) – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணி விற்பனை நபர் மற்றும் பாக்கர்
காலியிடம் 127
விண்ணப்பங்கள் அனுப்ப முதல் நாள்20 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்29 ஆகஸ்ட் 2020 மற்றும் 25 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
வேலைபிரிவுதமிழ்நாடு அரசு பணி
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர் வலைதளம்www.tncsc.tn.gov.in

TNCSC காலியிட விவரங்கள்

தேனி ரேசன் கடையில் வேலை 2020விற்பனையாளர் 26
மதுரை ரேசன் கடையில் வேலை 2020 விற்பனையாளர் 89 / பாக்கர் - 12
மொத்தம் 127

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2020 க்கான தகுதி

தகுதியானவர்கள் தகுதிக்கான சான்றளிக்கப்பட்ட நகல், சமூக சான்றிதழ்கள் மேலும், விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள்

கல்வி

விற்பனையாளர் - 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பாக்கர் - 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்த வயது - 18
அதிக வயது - 30

வயது தளர்வு

அரசின் விதிபடி

சம்பள விவரம்

விற்பனையாளர் - Rs.5000/- to Rs.12, 000/

பாக்கர் - Rs.4250/- to Rs.11, 000/

தேர்வு முறை

நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்

விற்பனையாளர் - 150
பாக்கர் - 10
SC/ST/PWD/விதவை - கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

-அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்யவும்
-விவரங்கள் முழுவதையும் படித்துப்பார்க்கவும்
- விண்ணப்படிவ லிங்கை கிளிக் செய்யவும்
-அனைத்து தகவலையும் பூர்த்தி செய்யவும்
-தேவையான ஆவணங்களை நகலெடுத்து இணைக்கவும்
- அதிகரப்பூர்வ முகவரிக்கு அனுப்பவும்.

தேனி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்பம்
விண்ணப்ப படிவம்

மதுரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்பம்
விண்ணப்ப படிவம்

தேனி விலாசம்
இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தேனி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்துறை வளாகம் I, தேனி ,

இறுதி நாள்
29 ஆகஸ்ட் 2020

மதுரை விலாசம்
இணைப்பதிவாளர்/ மாவட்ட தேர்வுக்குழு தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், மதுரை

இறுதி நாள்
25 செப்டம்பர் 2020

அடுத்த செய்தி