ஆப்நகரம்

2019 டெட் தேர்வு உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு; கட்-ஆப் எவ்வளவு?

முதல் தாள் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வாகவும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வாகவும் நடந்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விடைக்குறிப்புகளை டவுன்லோட் செய்யலாம்.

Samayam Tamil 10 Jul 2019, 5:29 pm
ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வக்கான உத்தேச விடைக்குறிப்புகளை (Answer Key) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil tet 4


இந்த ஆண்டு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வை விண்ணப்பித்தனர். ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு தாள்களாக நடைபெற்றது. 1,081 தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்தது.

முதல் தாள் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வாகவும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வாகவும் நடந்தன. இத்தேர்வுகளில் தரப்பட்ட வினாத்தாள்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வுகளை எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விடைக்குறிப்புகளை டவுன்லோட் செய்யலாம். அல்லது பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்தும் விடைக்குறிப்புகளை எளிதாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

TNTET 2019 Paper 1 Official Tentative Answer key
TNTET 2019 Paper 2 Official Tentative Answer key

கட்-ஆப் மதிப்பெண்கள் (தோராயமாக)
இட ஒதுக்கீடு பிரிவுகள்எதிர்பார்க்கப்படும்கட்-ஆப் மதிப்பெண்கள்(முதல் தாள் - இரண்டாம் தாள்)
பொது 60% 60
ஓ.பி.சி.55% 110-115
எஸ்.சி. 55% 100-110
எஸ்.டி. 55% 90-100

இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

அடுத்த செய்தி