ஆப்நகரம்

நேர்காணலின் போது பொதுவாக அனைவரும் செய்யும் 5 தவறுகள்!

வேலை கிடைக்கும் முன் நாம் சந்திக்கும் நேர்காணலே முதல் முக்கியமான சோதனையாகும். போட்டியான இக்காலகட்டத்தில் நேர்கணல் செய்பவரின் நம்பிக்கையைப் பெறுவது மிக முக்கியம்.ஒரு நேர்காணலின் போது நாம் செய்யகூடாத தவறுகள் இதோ.

Samayam Tamil 22 May 2020, 8:42 pm
வேலை சார்ந்து உங்களை ஓர் நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்களா? நிச்சயம் அனைவரிடமும் ஒருவிதமான இன்டெர்வியூஸ் பதட்டம் ஒட்டிக்கொள்வது இயல்பு தான். சிலர் பதட்டம் இன்றி மிக தைரியமாகவும் இருப்பர்கள். இந்த இரு வகையில் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி, சில தவறுகளை நீங்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டியது அவசியம். அவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...
Samayam Tamil common interview mistakes you should avoid in tamil
நேர்காணலின் போது பொதுவாக அனைவரும் செய்யும் 5 தவறுகள்!


தோற்றம்

உங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதுபோல உங்களை நேர்காணல் நடத்துபவரிடம் எப்படி காண்பிக்கிறீர்கள் என்பது அவசியம்.உங்களின் தோற்றத்தை முதலில் மதிப்பீடு செய்த பின்னரே நேர்காணல் செய்பவர் உங்களின் இன்னபிற தகுதிகளை முடிவுசெய்வார்.அதனால் நாம் அணிந்து கொள்ளும் உடைகள் நேர்த்தியானதாகவும் வேலைக்கு பொறுத்தவகையில் உள்ளவையாக இருக்குமேயானால் முதல் அபிப்பிராயமே சிறந்தவையாக அமையும்.

அதிகம் பதிலளித்தல்

நீங்கள் நேர்காணலில் பங்கு பெறும் பொழுது நேர்காணல் செய்பவரிடம் பதிலளித்தல் என்பது அவர் கேட்கும் கேள்விக்கு அப்பாலும் செல்லக்கூடியதாக இருக்காமல் அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்பதை உள்வாங்கி அதற்கு உண்டான பதிலை சரியாக சொல்லி சரியாக நிறுத்துதல் அழகு.அவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் இன்னும் சில கேள்விகள் எழுப்புகையில் அதை அவர்களே கேட்பர்.

உடல் மொழி

நம் வேண்டி வந்த பணிக்கு தங்குந்தாற்போல் நம் உடல்மொழி அவசியம் இருத்தல் வேண்டும்.உடல்மொழி சாதாரணமாக இல்லாமல் இருப்பது நலம்.நீங்கள் பயத்தில் இருக்கவும் வேண்டாம் நண்பரை போல சாதாரணமாக இருக்கவும் கூடாது.இந்த இரண்டுமே தங்களின் மதிப்பை நேர்காணல் செய்பவரிடத்து சற்று குறைத்து காட்டும் அதனால் அது மாதிரியான செயலைத் தவிர்க்கவேண்டும்.

தயாராகாமல் இருப்பது

நீங்கள் நேர்கணலுக்கு செல்லும் போது கட்டாயம் அந்த நிறுவனத்தைப் பற்றி என்ன பணி குறித்து முன்பே அறிந்திருத்தல் அவசியம்.அதற்காக அந்த நிறுவனத்தின் பழைய சரித்திரதை படிக்காமல் இப்போது அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் மற்ற போட்டியாளர்களை விட அந்நிறுவனம் எவ்வகையில் சிறந்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய நிறுவனத்தை பற்றியோ இல்லை உங்களின் மேல் அதிகாரியிடம் நீங்கள் பட்ட துன்பங்களைப்பற்றி கூறாமல் விட்டுவிடுவது நன்று.

இருக்கலாம் கசப்பான அனுபவங்களை விட்டுவிட்டு அங்கு நடைப்பெற்ற நல்ல சம்பவங்கள் நீங்கள் அதில் செய்த சாதனைகளை விளக்கி கூறும் பொழுது உங்களின் மீதும் உங்கள் பழைய நிறுவனத்தின் மீதும் நம்பிக்கையும் நல்மதிப்பும் நேர்காணல் செய்பவருக்கு உண்டாகும்.

அடுத்த செய்தி