ஆப்நகரம்

கொரோனா வந்தாலும் Layoff பண்ணாலும் இந்த 6 துறையில் வேலை செய்பவர்கள் கவலைப்பட தேவையில்லை!

COVID19 காரணத்தால் பாதிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியம் மட்டுமல்ல, வேலைகளும் தான். ஐடி நிறுவனங்கள் முதல் ரோட்டு கடை வரை பலரும் தங்கள் வேலை மற்றும் வருமானம் இழந்துள்ளனர். ஆனால், இந்த 6 துறைகளில் பணிபுரிந்தால் கொரோனாவால் கூட எதுவும் செய்ய முடியாது.

Samayam Tamil 30 Jun 2020, 4:01 pm
COVID-19 கொரானா ஊரடங்கு காலகட்டமானது ஒரு கடினமான கால கட்டமாகத் இருந்தாலும், செழிப்பான கடந்த காலத்தைப் பெறுவது கடினம் என்றாலும், இந்த காலத்திலும் நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளவும் எதிர்காலத்திற்குச் சிறப்பாக ஆயத்தமாக முடியும் என்று தொழில் வல்லுநர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் நாம் அடுத்தகட்ட வாழ்க்கைக்கான அடிகளை எடுத்து வைக்க வேண்டும்.
Samayam Tamil high salary jobs you should know in this covid19 situation
கொரோனா வந்தாலும் Layoff பண்ணாலும் இந்த 6 துறையில் வேலை செய்பவர்கள் கவலைப்பட தேவையில்லை!


கார்ப்பரேட் துறையின் எதிர்காலமானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளையும் சார்ந்தே இருக்கப் போகிறது. தகவல் தொழில்நுட்ப துறையானது ஒரு கடல் என்றே சொல்லலாம்‌‌. அதில் பல துறைகளில் அதிக ஊதியம் பெற முடியும்‌. இனிவரும் காலங்களில் இந்த துறை சார்ந்து தேவைப்படும் பணிகளின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

டேட்டா சைன்டிஸ்ட் (தரவு விஞ்ஞானிகள்)

இந்த தகவல் தொழ்ல்நுட்ப துறையில் ஒப்பீட்டளவில் இந்த தரவு தொடர்பான பணிகள் என்பது புதிய டிரெண்ட் ஆகும். டேட்டா சைன்டிஸ்ட் பணியாளர்களின் பணியானது நிறுவனங்கள் மேற்கொள்ளும் டேட்டா எனும் தரவுகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஆகும். இந்த விஞ்ஞானிகள் அதிகப்படியான நல்ல வருவாயை நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க பெரிதும் உதவுகிறார்கள்.

சாஃப்டுவேர் டெவலப்பர்ஸ் (மென்பொருள் உருவாக்குநர்கள்)

சாஃப்ட்வேர் அல்லது வலைதளத்தின் பக்கங்கள் மற்றும் அதற்கான கோடுகளை எழுதி வடிவமைத்தல் மற்றும் பராமரித்தல் டெஸ்டிங் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது இவர்களின் பணிகள். இந்த பணியில் வாய்ப்புகள் இருந்தாலும் டேட்டா எனும் தரவுகளுக்கான தளங்களிலும் ஒரு கண் இருக்கட்டும்‌.

தயாரிப்பு மேலாளர்கள்

இந்த பணியானது நீண்ட காலமாக இருந்த போதிலும் இதன் தேவையானது இப்போதும் உயர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வது, சந்தைப்படுத்துவது போன்ற உத்திகளைக் கையாள்வதற்கு தயாரிப்பு மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

பிளாக்செயின் டெவலப்பர்கள்

இந்த புதிய தொழில்நுட்பத் துறை அனைத்து இடங்களிலும் தரவிற்கான பரிவர்த்தனைகள் முதல் தரவைக் கையாள்தல் வரை அனைத்திற்கும் பொருந்தும். இந்த தொழில்நுட்பம் இடைத்தரகர்களைக் குறைக்கவும் வேகத்தை அதிகரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த துறையில் கண்டிப்பாக அதிக ஊதியம் பெற முடியும் அதோடு எதிர்காலத்தில் நிறைய பணி வாய்ப்புகளும் இருக்கின்றன.

டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள்

தகவல் தொழில்நுட்ப துறையில் டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக குவிந்துள்ளன. கண்டன்ட் தரவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதோடு ஏராளமான வாய்ப்புகளையும் இந்த பணிகளுக்கான தேவையையும் அதிகரிக்கும்.

முதலீட்டு வங்கியாளர்கள்

இந்த வேலை அதிக பொறுப்புகளை உள்ளடக்கியது‌. இந்த முதலீட்டு வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைத்து அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு உதவுகிறது. இந்த பணிக்கு வரும் நபர் நல்ல கம்யூனிகேஷன்ஸ் அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதோடு தனது வாடிக்கையாளர்களைத் துணிச்சலாக கையாள வேண்டும்‌.

அடுத்த செய்தி