ஆப்நகரம்

"லே ஆஃப்" - ஐ.டி ஊழியர்களுக்கு நாஸ்காம் எச்சரிக்கை..!

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்தினால் மட்டுமே லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பை தடுக்க முடியும் என ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

TNN 20 May 2017, 2:07 am
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்தினால் மட்டுமே லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பை தடுக்க முடியும் என ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil  layoff number exaggerated it industry is a net hirer of people nasscom
"லே ஆஃப்" - ஐ.டி ஊழியர்களுக்கு நாஸ்காம் எச்சரிக்கை..!


கடந்த மாதம் முதல் இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளினால், அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்த 56,000 ஊழியர்கள் , இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளினால் வேலையிழப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம்,மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐ.டி ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்தினால் மட்டுமே லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"காலத்திற்கேற்ப உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் முன்னேறி வருகின்றன. இந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்காக புதிய முறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வளர்ச்சியை புரிந்து கொண்டு செயலாற்றும் வகையில் , இந்திய ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் 40 சதவீத ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு, தங்கள் திறனை மேம்படுத்துவது அவசியமாகிறது.

இந்த புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள ஐ.டி ஊழியர்கள் தவறும்பட்சத்தில்,ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. திறமையுள்ள பணியாளர்களை எந்த நிறுவனமும் வேலை நீக்கம் செய்ய விரும்புவதில்லை. வேலை நீக்க நடவடிக்கைகள் ஐ.டி நிறுவனங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் நடவடிக்கை என்றாலும், வேலையிழப்புகளுக்கு ஏற்றவாறு இந்திய தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. மேலும் ஊடகங்களில் கூறப்படும் லே ஆஃப் எண்ணிக்கை தவறான தகவல்.” என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்ட்டிபிஷல் இண்டெலிஜன்ஸ் போன்றவையே நாஸ்காம் குறிப்பிடும் புதிய தொழில்நுட்பங்களாகும்.

Layoff number exaggerated, IT industry is a net hirer of people: Nasscom

அடுத்த செய்தி