ஆப்நகரம்

குரூப் 4, விஏஓ தேர்வில் 992 முனைவர் பட்டம் பெற்றவர்கள்

குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு முனைவர் பட்டம் பெற்ற 992 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 15 Feb 2018, 9:06 am
குரூப் 4, விஏஓ தேர்வுகளுக்கு முனைவர் பட்டம் பெற்ற 992 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil 992 ph d holders among tnpsc applicants
குரூப் 4, விஏஓ தேர்வில் 992 முனைவர் பட்டம் பெற்றவர்கள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 11ஆம் தேதி விஏஓ உள்ளிட்ட 9351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தியது. இத்தேர்வுக்கு 20 லட்சம் பேருக்கு மேலானவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் 15 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே டிஎன்பிஎஸ்சி இத்தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 6.2 லட்சம் இளநிலை பட்டதாரிகளும் 1.92 லட்சம் பி.இ., பி.டெக்., பட்டதாரிகளும் 2.53 லட்சம் முதுநிலை பட்டதாரிகளும் 23,049 எம்.பில் பட்டதாரிகளும் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

விண்ணப்பதாரர்களில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் முறையே 2.26 லட்சம் மற்றும் 6.2 லட்சம் பேர் மட்டுமே.

அடுத்த செய்தி