ஆப்நகரம்

உடலில் ‘டாட்டூ’ இருந்தால் வேலை கிடையாது - அரசு உத்தரவு

உடலில் பச்சை குத்தியிருந்தால் (டாட்டூ) வேலை கிடையாது என இந்திய விமானப்படை உத்தரவிட்டிருந்தது.

Samayam Tamil 29 Jan 2018, 7:39 am
புதுடெல்லி : உடலில் பச்சை குத்தியிருந்தால் (டாட்டூ) வேலை கிடையாது என இந்திய விமானப்படை உத்தரவிட்டிருந்தது.
Samayam Tamil a tattoo could cost you your job with indian air force
உடலில் ‘டாட்டூ’ இருந்தால் வேலை கிடையாது - அரசு உத்தரவு


முன்னதாக விமானப்படை வேலையில் சேருவதற்காக அதற்கான தேர்வு எழுதி, மருத்துவ சோதனையும் முடிந்திருந்தார். அனைத்தும் முடிந்து வேலையில் சேர பணி நியமன ஆணைக்காக காத்திருந்த போது, அவரது உடலில் டாட்டு வரையப்பட்டிருப்பதால், வேலை கிடையாது என அவரின் பணி நியமனம் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி, விமானப் படையில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் உடலில் ‘டாட்டூ’ வரையப்பட்டிருந்தால் வேலை கிடையாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு உடலில் எந்த ஒரு காயத்தால் ஏற்பட்ட தழும்பும் இருக்கக் கூடாது கூறப்பட்டுள்ளது. அதனால் வேலை ரத்து செய்யப்பட்டது சரி தான் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி