ஆப்நகரம்

போலி வேலைவாய்ப்பு செய்திகள்; சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை

மெட்ரோ நிர்வாகத்தில் வேலை என்று வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகள் கண்டு நம்ப வேண்டாம் என்று விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 16 Mar 2018, 10:50 pm
மெட்ரோ நிர்வாகத்தில் வேலை என்று வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகள் கண்டு நம்ப வேண்டாம் என்று விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil chennai metro rail cautions candidates about misleading job ads
போலி வேலைவாய்ப்பு செய்திகள்; சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னையில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு குறித்து போஸ்டர்கள், நோட்டீஸ்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை போலியானவையே. இதை நம்பி விண்ணப்பித்து ஏமாறியவர்களும், இன்னும் பல பேர் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை என்று சமூக வலைதளங்கள் உட்பட வெளிவரும் போலி வேலைவாய்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் உண்மையான வேலைவாய்ப்புகள், பணியிடங்கள் இருக்கும்பட்சத்தி்ல், அது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளத்திலும், செய்திதாள்களிலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

போலியான விளம்பரங்களை நம்பி எவரேனும் ஏமாற்றப்பட்டாலோ, அல்லது தனிநபர் இழப்புகள் ஏற்பட்டாலோ அதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி