ஆப்நகரம்

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : இப்போதே தயாராக இருங்கள்!

தனியார் நிறுவனங்களில் டேட்டா அனாலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா சைன்ஸ் பிரிவுகளில், கூடிய விரைவில் சுமார் 97 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 1 Mar 2019, 12:59 pm
தனியார் நிறுவனங்களில் டேட்டா அனாலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா சைன்ஸ் பிரிவுகளில், கூடிய விரைவில் சுமார் 97 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil job


அறிவியிலின் பரிணாமத்தில் இறுதியாக வந்தது கம்ப்யூட்டர் சைன்ஸ். தற்போது இதன் அடுத்தக்கட்டமாக டேட்டா சைன்ஸ் உள்ளது. அதாவது ஆன்லைனில் தேடும், பதிவேற்றப்படும், தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து எதிர்காலத் தேவைகளை கணிக்கும் முறை தான் டேட்டா அனாலிசிஸ். உதாரணமாக ஆன்லைன் ஷாப்பிங்கில் நாம் தேடும் பொருட்கள், எத்தனை பேர், என்ன விலையில், எவற்றை தேடுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய பொருட்கள், புதிய விலை ஆகியவை உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தாண்டு மட்டும் கூடிய விரைவில் 97,000 டேட்டா சைன்ஸ், டேட்டா அனாலிட்டிக்ஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக EdTech என்ற வலைதளம் நடத்திய கருத்துக்கணிப்பில், ஐந்து வருடங்களுக்ள்ளாக பணி அனுபவம் பெற்றவர்கள் 97 சதவீதம் நிரப்பபட உள்ளார்கள். முன் அனுபவம் இல்லாதவர்கள் 21 சதவீதத்தினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்தாண்டு வெறும் 31 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டனர் என்கிறது கருத்துக்கணிப்பு. மேலும், இந்த ஆய்வறிக்கையின்படி, டேட்டா அனாலிட்டிக்ஸ் வேலைக்கு வருடத்துக்கு 11.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் வருங்காலங்களில் 15 லட்சமாக உயரவும் வாய்ப்புள்ளது.

பெங்களுரூவில் 24%, மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் 22%, மும்பை 15% என நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பணியிடம் வழங்கப்பட உள்ளது. எனவே, கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பு படித்தவர்கள், டேட்டா சைன்ஸ் மற்றம் டேட்டா அனாலிட்டிக்ஸ் தொடர்பான விவரங்களை தெரிந்து கொண்டு, இப்போதே அதற்கு ஏற்றவாற தயாராகுவது நல்லது.

அடுத்த செய்தி