ஆப்நகரம்

சாதி வெறியின் உச்சகட்டம் : துப்புரவு பணிகளுக்கு போட்டியிடும் எம்.பி.ஏ பட்டதாரிகள்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

TNN & Agencies 28 Oct 2017, 1:19 pm
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான துப்புரவாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
Samayam Tamil due to caste discrimination the engineering and mba candidates were applying for manual scavenging job
சாதி வெறியின் உச்சகட்டம் : துப்புரவு பணிகளுக்கு போட்டியிடும் எம்.பி.ஏ பட்டதாரிகள்


எழுத்துத் தேர்வில் 2,500 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஏ., ஆகிய பட்டப்படிப்புகளை படித்த பட்டாதாரிகள்.

பொறியாளர்களும், முதுநிலை பட்டதாரிகளும் துப்புரவுப் பணிக்கு போட்டி போடும் அளவிற்கு பட்டதாரிகள் சாதிக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர். துப்புரவு பணிகளை எல்லா சாதி மக்களும் செய்வதில்லை . தலித்துகள், சக்கிலியர், மற்றும் பிறப்டுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களே இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சாதையை சேர்ந்தவர்கள் எந்த பட்டம் படித்தாலும் அவர்களுக்கு துப்புரவு பணிகளை தவிற வேறு பணிகள் கிடைப்பதில்லை . இந்த சாதியை சேர்ந்தால் அவர்கள் துப்புரவு பணிகள்தான் செய்ய வேண்டும் என்ற கொடூர சாதிய அமைப்பு இங்கு நிலவுகிறது.

துப்புரவுப் பணிக்கு போட்டி போடும் அளவிற்கு பட்டதாரிகள் எல்லாம் இந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே. இந்த நிகழ்வைக் கண்டு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.

due to caste discrimination the engineering and mba candidates were applying for manual scavenging job

அடுத்த செய்தி