ஆப்நகரம்

காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

TNN 13 Apr 2017, 10:34 pm
சென்னை : காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil free coaching for police recuritment
காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி


சென்னையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம், சென்னை - 4ல் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த இலவச பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாராக இருக்கும் சென்னை மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்ளலாம்.

போட்டித் தேர்விற்கு தயாராக இருக்கும் சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கு தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்வி சான்றிதழ்களுடன் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டும் "என்று சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.


free coaching for police recuritment

அடுத்த செய்தி