ஆப்நகரம்

Airmen Phase II Admit Card: விமானப்படை தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கான அடையாள அட்டை மற்றும் தேர்வு குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Apr 2019, 4:43 pm
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கான அடையாள அட்டை மற்றும் தேர்வு குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil indian-air-force


இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் X மற்றும் Y பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 10 முதல் 14ம் தேதி வரையில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. குரூப் X மற்றும் Y இரு பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது இரண்டாம் கட்ட தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுச்சீட்டுவழங்கப்படுகிறது. விண்ணப்பதார்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டை airmenselection.cdac.in என்ற விமானப்படையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியலை https://airmenselection.cdac.in/CASB/img/result/SHORTLISTED_CANDIDATES_CATEGORY.PDF என்ற உரலியல் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதில் செர்ச் (Ctrl+F) மூலம் தங்களுடைய பதிவு எண் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். இதில் தேர்வர்களின் பதிவு எண் இருக்கும்பட்சத்தில், இரண்டாம் நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு நுழைவுச்சீட்டு பெற முடியாது.

இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், இந்திய விமானப்படையில் பயிற்சியில் அனுமதிக்கப்படுபவர்கள். அனைத்துக்கட்ட பயிற்சியும் நிறைவடைந்த பிறகு, அவரவர் பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் X மற்றும் குரூப் Y இல் நியமனம் செய்யப்படுவார்கள். எந்த இடத்திலும் இந்த பணியிடம் மாற்ற முடியாது. பயிற்சியின் போது மாதம் 14,600 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

அடுத்த செய்தி