ஆப்நகரம்

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பு

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Samayam Tamil 29 Dec 2018, 6:06 pm
இந்தியன் ரயில்வேயில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Samayam Tamil Indian Railway


இந்தியன் ரயில்வேயில் 64 ஆயிரம் லோகோ பைலட், 62 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநா்கள், கேங்க்மேன் ஆகியோருக்கான இடங்களை நிரப்பும் பணியில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட தோ்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக இளநிலை பொறியாளா்களை தோ்வு செய்ய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த இளநிலை பொறியாளா்கள் பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்கான ரயில்வே துறையின் முறையான அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கான தோ்வுகள் மாா்ச் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி