ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பிழைகள்! தேர்வாளர்கள் குமுறல்

வேளாண் அதிகாரி பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்களில் பிழைகள் இருந்ததால், தேர்வாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

Samayam Tamil 31 Aug 2018, 7:25 pm
வேளாண் அதிகாரி பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்களில் பிழைகள் இருந்ததால், தேர்வாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
Samayam Tamil tnpsc office



டிஎன்பிஎஸ்சி வேளாண் அதிகாரி பதவிக்கான தேர்வில் மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 28 மற்றும் 71 இல், கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாகவே இருந்தது. இந்தியாவில் முதன்முதலாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் எப்போது அமைக்கப்பட்டது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில் 1923 ஆகும். ஆனால், இந்த பதில், கொடுக்கப்பட்ட நான்கு ஆப்ஷன்களிலும் இல்லை.

இதே போல், 24 வது கேள்வியில் ஆங்கிலத்தில் non cooperation movement என்பதை சட்டமறுப்பு இயக்கம் என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. Non cooperation movement என்றால் ஒத்துழையாமை இயக்கம் ஆகும்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் கூறுகையில், தேர்வாளர்களிடம் இருந்து புகார்கள் வரும்பட்சத்தில், தேவையான நடவடிக்கைகள் ஆலோசித்து எடுக்கப்படும் என்றனர்.

அடுத்த செய்தி