ஆப்நகரம்

10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Oct 2018, 3:39 pm
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆய்வாளர் (குரூப் III ஏ) பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
Samayam Tamil tn
10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!


பதவி: இளநிலை ஆய்வாளர்

மொத்த காலியிடங்கள்: 30

தகுதி: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2018

விண்ணப்ப கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாவும் செலுத்தலாம்.

எஸ்.சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்டைம் பதிவுக்கட்டணம் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும்விவரங்களை தெரிந்து கொள்ள http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அடுத்த செய்தி