ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணி: விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசிநாள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை வேந்தர் தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பிப்ரவரி 1 ஆம் தேதி கடைசி நாள் .

TNN 4 Jan 2018, 7:18 pm
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக துணை வேந்தர் தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பிப்ரவரி 1 ஆம் தேதி கடைசி நாள் .
Samayam Tamil vice chancellor vacancy anna university last date february one
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணி: விண்ணப்பிக்க பிப்.1ம் தேதி கடைசிநாள்


அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த ஆண்டும் மே மாதம் 26 தேதி முடிவடைந்துள்ளது. இந்த பதவிக்கான இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு ,பல்வேறு காரணங்களால் இரண்டு குழுக்களும் கலைக்கப்பட்டது.

அதன் பின்பு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் ஆர். கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றதால் தேடல் குழு தனது பணிகளை ஒத்திவைத்தது. தற்போது தேடலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: என்.கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பு அதிகாரி, தேடல் குழு - அண்ணா பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை, சென்னை – 600022 (speed post )
கடைசி நாள் : பிப்ரவரி 1

கல்வித்தகுதி : பொறியியல் , தொழில்நுட்பம் அல்லது அறிவியலில் பிஎச் .டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் . ஆராய்ச்சி துறையில் மற்றும் ஆசிரியர் பணியில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அனுபவம் தேவை .

அடுத்த செய்தி