ஆப்நகரம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்!

Anna University Recruitment 2020: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jan 2020, 12:36 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரோபஷனல் அசிஸ்டெண்ட், கார்பெண்டர் உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Samayam Tamil Anna University Recruitment 2020


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனவரி 24 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை www.annauniv.edu இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி டீச்சிங், புரோபஷனல் அசிஸ்டெண்ட் 1, அப்ளிகேஷன் புரோகிராமர் ஆகிய பி.டெக், பி.இ, எம்எஸ்சி தகுதியிலான பதவிகளும், பிளம்பர், கார்பெண்டர் காலியிடங்களும் உள்ளது.

Also Read This:

சென்னை கூட்டுறவு நிறுவனத்தில் புதிய வேலை.. 203 காலியிடங்கள்..
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் TN MRB தேர்வு கால அட்டவணை வெளியீடு!
மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம்!

ஆசிரியர் பணிகள்:
ஆசிரியர் பணிக்கு மொத்தம் 12 பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக பணியாகும். தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம் ஆகிய துறைகளில் காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் இளநிலை, முதுநிலை இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். கணிதத்துறை விண்ணப்பதாரர்கள் முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில் படித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் அல்லாத பணிகள்:
புரேபஷனல் அசிஸ்டெண்ட் – 1, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III, பியூன், கிளரிக்கல் அசிஸ்டெண்ட், கார்பெண்டர், எலக்ட்ரீசியன் ஆகிய ஆசிரியர் அல்லாத பணிகள் ஆகும். பியூன், எலெக்ட்ரிசீயன், கார்பெண்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

புரொபஷனல் அசிஸ்டெண்ட் 1 பணிக்கு B.E (CSE / IT) படிப்பு, புரோபஷனல் அசிஸ்டெண்ட் III பணிக்கு ECE டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான சம்பளம் தினக்கூலி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மேற்கண்டபணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Dean,
College of Engineering, Guindy Campus,
Anna University,
Chennai - 600 025.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு அண்ண பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.
Anna University Technical Post Recruitment Notification 2020 Anna University Teaching Post Recruitment Notification 2020 Anna University Technical Post Recruitment Notification 2020

அடுத்த செய்தி