ஆப்நகரம்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை!

டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 23 Apr 2020, 5:11 pm
டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil Delhi WCD Recruitment 2020


டெல்லி எனசிடி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட், ப்ராஜெக்ட் அசோசியட்ஸ், செக்ரேட்டிரியல் அசிஸ்டென்ட், ஆபீஸ் மெசேஞ்சர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பதவியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபப்படுகிறது.

மொத்தம் 187 காலியிடங்கள் உள்ளது. அதிகபட்சமாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 84 இடங்களும், தொகுதி திட்ட உதவியாளர் பதவிக்கு 76 இடங்களும் உள்ளது. மாவட்ட திட்ட உதவியாளர் பணிக்கு 10 இடங்கள் உள்ளது. மற்ற அனைத்து பதவிகளும் தலா ஒரு காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் டெல்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே, டெல்லியில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
கன்சல்டன்ட் – 55, அக்கவுண்டன்ட், செக்ரேட்டரியல் அசிஸ்டென்ட் – 28, ஆபீஸ் மெசேஞ்சர் – 27 என்ற வகையில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.cams.wcddel.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு டெல்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Department of Women and Child Development Recruitment Notification PDF

அடுத்த செய்தி