ஆப்நகரம்

சுமார் 3.6 கோடி இழப்பை சரிகட்ட ஊழியர்களை பணிநீக்கும் Swiggy!

ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஸ்விக்கியின் செயல்பாடுகள் 2021-22 நிதியாண்டில் (FY22) 124% உயர்ந்து ரூ. 5,704.90 கோடியாக உள்ளது. அதே சமயம் இழப்புகள் ரூ. 1,616.90 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ. 3,628.90 கோடியாக உள்ளது.

Authored byDevaki | Samayam Tamil 3 Jan 2023, 10:39 am
ஆன்லைன் உணவு மற்றும் மளிகை விநியோக நிறுவனமான ஸ்விக்கியின் (Swiggy) நஷ்டம் கடந்த நிதியாண்டில் 2.24 மடங்கு அதிகரித்து ரூ.3,628.9 கோடியாக உயர்ந்துள்ளது.
Samayam Tamil Swiggy
Swiggy Revenue FY22


டோஃப்லரின் தகவல்படி, 2022 நிதியாண்டில் decacorn இன் வருவாய் இரு மடங்கு உயர்ந்து ரூ. 5,704.9 கோடியாக இருந்தது. அதே போல, 21 ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் இழப்புகள் ரூ.1,616.9 கோடியிலிருந்து உயர்ந்து மொத்த செலவுகள் 131 சதவீதம் அதிகரித்து ரூ.9,748.7 கோடியைத் தொட்டது. இது கடந்த வருடம் ரூ.4,292.8 கோடியாக இருந்தது என கூறியுள்ளது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்விக்கி, அதன் விரைவான வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட்டில் இந்த ஆண்டில் முதலீடு செய்தது. மளிகை மற்றும் எஃப்எம்சிஜி தயாரிப்புகளில், அதன் விற்பனை FY22 இல் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து ரூ.2,036 கோடியாக இருந்தது. 21 நிதியாண்டில் ரூ. 1,878.90 கோடியாக இருந்த அதன் வருவாய், ரூ.3,444.40 கோடியாக அதிகரித்தது.

Recession2K22: வேலை போன 1 மாதத்தில் புதிய வேலை; மாஸ் காட்டும் டெக் ஊழியர்கள்!

ஸ்விக்கியின் கிளவுட் கிச்சன் பிராண்டுகளான Homely, The Bowl Company, Breakfast Express போன்றவற்றின் விற்பனை, FY21 இல் 83.30 கோடி ரூபாயில் இருந்து FY22 இல் 87.50 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நிறுவனத்திற்கு நஷ்டம் அதிகரித்தாலும், விநியோகச் சங்கிலி, செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்பப் பாத்திரங்களில் 3-5% பணியாளர்களை உள்ளடக்கிய 250 நிர்வாகிகளை Swiggy நீக்கியதாக தெரிவித்துள்ளது.

FY22 இல் Zomato-வின் பட்டியலிடப்படாத முக்கிய போட்டியாளரான Swiggy, விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் 300 சதவிகிதம் அதிகமாகச் செலவிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு (1,848.7 கோடி) அதிகம். இதை தவிர, அவுட்சோர்சிங் செலவும், 2022 ஆம் நிதியாண்டில் ரூ. 2,249.7 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய வருடம் இது ரூ.985.1 கோடியாக இருந்தது.

மொத்த ஊழியர்களில் சுமார் 150 பேரை பணிநீக்கம் செய்த PayU..!

FY21 இல் ரூ. 2,546.9 கோடியிலிருந்து வருவாயில் 124 சதவீதம் அதிகரித்து, ரெண்டரிங் பிளாட்ஃபார்ம் சேவைகளின் வசூல் 83 சதவீதம் உயர்ந்து 22ஆம் நிதியாண்டில் ரூ. 1,879 கோடியாக இருந்தது. மளிகை மற்றும் எஃப்எம்சிஜி தயாரிப்பு விற்பனையில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் லாபம் ரூ.2,036 கோடிக்கு உயர்ந்தது. ஆனால், நிறுவனம் செலவீனத்தை கட்டுக்குள் வைக்காததால் நஷ்டத்தை சந்தித்தது. இதை சமாளிக்க வரும் காலங்களில் ஸ்விக்கி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
Devaki
தேவகி ஜெகநாதன் "இதழியல் மற்றும் ஊடகவியல்" - சமயம் தமிழில் Digital Content Producer. ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி