ஆப்நகரம்

வனத்துறை அதிகாரி பதவிக்கான IFS தேர்வு முடிவுகள் வெளியீடு!

IFS Final Result 2020: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் IFS தேர்வு இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Mar 2020, 12:26 pm
இந்திய வனத்துறை அதிகாரி பதவிக்கான IFS தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil IFS Result 2020


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வனத்துறை அதிகாரி பதவிக்கான தேர்வை கடந்த டிசம்பர் மாதம் நடத்தியது. அதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக நேர்காணல் தேர்வை பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது UPSC IFS Result 2020 தேர்வு முடிவுகள், தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள், இதனை UPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsc.gov.in/ என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தம் 88 விண்ணப்பதாரர்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, பொது - 27, EWS - 11, ஒபிசி - 31, எஸ்சி 13, எஸ்டி - 6 என்ற வகையில் இடஒதுக்கீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. புரொபஷனல் லிஸ்டில் 20 விண்ணப்பதாரர்களின் பதிவு எண் உள்ளது.

நேரடியாக IFS Result 2020 பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.
UPSC IFS Final Result 2020

அடுத்த செய்தி