ஆப்நகரம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்காணல் ஒத்திவைப்பு!

UPSC Civil Services Postponed: கொரோனா வைரஸ் காரணமாக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்காணல் அனைத்தும், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 20 Mar 2020, 7:05 pm
Union Public Service Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், குடிமைப் பணிகளுக்கான (Civil Service) தேர்வை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மெயின் தேர்வு நேர்காணல் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் நடத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிவில் சர்வீஸ் நேர்காணல் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil UPSC Civil Services Interview Postponed


இத தொடர்பாக யுபிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த நேர்காணல் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்காணலுக்கான புதிய தேதி விவரங்கள், விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வை போல், பெரும்பாலான அரசுப்பணிக்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த அரசுத் தேர்வுகள், நேர்காணல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

பெரும்பாலான அரசுத்தேர்வுகள் ஒத்திவைப்பு! முழு பட்டியல்
உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மார்ச்20 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி