ஆப்நகரம்

கரூர் எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி: கருணாநிதி கண்டனம்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

TOI Contributor 27 Apr 2016, 6:16 pm
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil karunanidhi asks necessary action in murder attempt against karur sp
கரூர் எஸ்.பி.,யை கொலை செய்ய முயற்சி: கருணாநிதி கண்டனம்


அம்மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்ற அதிமுக பிரமுகரின் வீடு மற்றும் குடோனில் கடந்த வாரம் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில், ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கரூர் முழுவதும் அதிமுக.,வினருக்கு எதிரான கண்காணிப்புப் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்த ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை விசாரித்ததில், அதிமுக நபர்கள் சிலர் எஸ்.பி.யை கொல்லும்படி தன்னை மிரட்டியதாகக் கூறியுள்ளார். ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக, இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக.,வினரின் அராஜகம் வெளி உலகுக்கு தெரியவந்துவிட்ட நிலையில், தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வந்திதா பாண்டே போன்ற சில நேர்மையான அதிகாரிகளால்தான், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருவதாகவும், கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி