ஆப்நகரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு

ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TNN 16 Apr 2016, 10:38 pm
ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil kongunadu desiya makkal katchi gets cap symbol
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு


கடந்த 2011ம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 6 இடங்களில் போட்டியிட்டது. அதற்கடுத்து வந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், இக்கட்சி இடம்பெற்றது.

இந்நிலையில், தற்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், திமுக அல்லது மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்துப் போட்டியிடுவதாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார். மேலும், 13 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது கட்சியின் தேர்தல் சின்னமாக, தொப்பி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி