ஆப்நகரம்

ஒரே நாளில் 152 பேர் டிஸ்மிஸ்... வெளிச்சத்துக்கு வந்த கல்லூரி மெகா முறைகேடு!!

பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கிவரும் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கண்டறியப்பட்ட உதவி பேராசிரியர்கள் உள்பட 152 பேர் அதிரடியாக பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 27 Aug 2020, 7:36 pm
பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி என சென்னை மாநகரின் பவ்வேறு பகுதிகளில் ஆறி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உரிய தகுதியில்லாதவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
Samayam Tamil college


இதையடுத்து, அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பிலிருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம், இந்த புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டது.

தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெறாதவர்கள் என பலர் முறைகேடாக உதவிப் பேராசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர்கள், நூலகர்கள் என பல்வேறு பணிகளில் சேர்ந்திருந்ததும் நீதிபதியின் ஆய்வில் தெரிய வந்தது..

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க சென்னையில் புதிய நடைமுறை!

இதையடுத்து, பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 152 பேரை டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில், நியமன உத்தரவை ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை நிறுத்திவைக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி