ஆப்நகரம்

அமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்கு, போலீஸ் ஜாமீன்!

மத்திய அமைச்சரைச் சென்னையில் வைத்து பதாகை கொண்டு அடிக்க முயன்றவருக்கு போலீசார் சொந்த ஜாமீன் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Samayam Tamil 22 Nov 2020, 11:35 am
மத்திய உள்துறை அமைச்சர் வருகையின் போது பதாகை வீசிய நபர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
Samayam Tamil அமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்கு, போலீஸ் ஜாமீன்!
அமித் ஷா மீது போஸ்டர் வீசியவருக்கு, போலீஸ் ஜாமீன்!


சென்னை விமான நிலையத்திற்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா சனிக் கிழமை வந்தார். அப்போது கான்வாயிலிருந்து கீழ் இறங்கிய அமைச்சர், அங்கிருந்து ரோட்டில் சிறிது தூரம் நடந்து சென்று கையசைத்தார்.

எதிர்பாராத நேரத்தில் கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் கையிலிருந்த பதாகையைத் தூக்கி அமித்ஷாவை மீது வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை தாக்கினர். பின்னர் போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர்.

யார் அந்த மர்ம நபர்? சென்னை வந்த அமித் ஷா மீது பதாகைகள் வீசியதால் பரபரப்பு!

விசாரணையில் அவர் நங்கநல்லூரை சேர்ந்த துரைராஜ்(67) என்பது தெரியவந்தது. இவர் மீது மீனம்பாக்கம் போலீசார் 294(b), 506(1) என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி