ஆப்நகரம்

அடக்கொடுமையே... கொரோனா நோயாளிகள் 277 பேர் மாயம்!!

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 277 பேரை காணவில்லை என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், அவர்களை கண்டுபிடிக்க போலீசின் உதவியை நாடியுள்ளது.

Samayam Tamil 14 Jun 2020, 9:06 pm
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில்தான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
Samayam Tamil corona chennai


இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக கலக்கமடைந்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்: கொரோனாவால் இன்று மட்டும் 38 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் 277 பேர் மாயமாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை கண்டறிய மாநகர போலீசின் உதவியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நாடியுள்ளனர்.

சென்னையை பொருத்தவரை, கொரோனா அறிகுறி அல்லது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் முகவரி, மொபைல்ஃபோன் ஆகிய விவரங்கள் பரிசோதனை மையங்கள் மூலம் மாநகராட்சி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.

ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தால், சம்பந்தப்பட்ட நபர்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களை மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பார்கள்.

வீடு வீடாக சர்வே - டபுள், ட்ரிபிள் மடங்காகும் கோவிட்-19 டெஸ்ட்; அமித் ஷா தடாலடி!

குறிப்பிட்ட நபர்கள் தங்களது வீட்டிலிருந்து வேறெங்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்களின் வீட்டின் முன்பகுதியில் 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்' என்று நோட்டீஸும் ஒட்டப்படுகிறது.

இப்படியிருந்தும், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை, கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 277 பேர் மாயமாகிவிட்டதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள், கொரோனா பரிசோதனையின்போது கொடுத்துள்ள முகவரி தவறாக உள்ளதாகவும், மொபைல்ஃபோன் சுவிட்ஸ் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி