ஆப்நகரம்

திமுக வாக்கு வங்கிக்கு பயங்கர ஆபத்து...சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

2ஜி அலைக்கற்றை வழக்கு மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளதால் திமுகவினரின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாகவும், இதனால் அக்கட்சியின் வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 11 Dec 2020, 10:40 am
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழக முன்னாள் முதல்வருமான ராஜாஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரின் 142 வது பிறந்தநாள் விழா அரசு நிகழ்ச்சியாக நேற்று (டிசம்பர் 10) கொண்டாடப்பட்டது.
Samayam Tamil கோப்பு படம்
அமைச்சர் ஜெயக்குமார்- சென்னை பேட்டி


இதனை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்குகீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது:
மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறு பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆ.ராசா பேசி வருகிறார்.

எம்ஜிஆரை ரஜினி முன்னிலைப்படுத்துவதில் என்ன தப்பு? -அமைச்சர் அசத்தல் கேள்வி!

ஊழலின் ஒட்டுமொத்த உருவமான கருணாநிதியைப் பற்றி பேச நிறைய உள்ளது. ஆனால் எங்கள் கட்சியினர் பக்குவப்பட்டவர்கள் என்பதால் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசமாட்டோம்.

நடந்து முடிந்த வழக்கைப் பற்றி பேசும் ராசாவின் பயம் அவர் பேச்சிலேயே தெரிகிறது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் மேல்முறையீட்டிற்கு சென்றுள்ளதால் திமுகவினரின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இதனால் திமுகவின் வாக்கு வங்கிக்கு தற்போது பயங்கர ஆபத்து ஏற்பட்டுள்ளது.

'இந்த அரசு நமக்கு எதிரான அரசு' - பா. ரஞ்சித் காட்டம்!

ஜெயலலிதா மரண விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்த செய்தி