ஆப்நகரம்

3 வயது சிறுமி சஞ்சனாவின் வில் வித்தை சாகசம்!

சென்னையைச் சேர்ந்த சிறுமி, வில் வித்தையில் புதிய கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.

Samayam Tamil 18 Aug 2018, 5:18 pm
சென்னையைச் சேர்ந்த சிறுமி, வில் வித்தையில் புதிய கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.
Samayam Tamil aHR0cHM6Ly9jLm5kdHZpbWcuY29tLzc5aTYydW9fcC1zYW5qYW5hXzYyNXgzMDBfMTdfQXVndXN0XzE4LmpwZw==


3 வயது சிறுமி சஞ்சனாவின் கின்னஸ் சாதனை முயற்சி எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் சுதந்திரத் தினத்தன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த சாதனை முயற்சியைப் பார்க்க நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் கூடியிருந்தனர்.

இந்த சாதனை முயற்சியில் 8 மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை நோக்கி மூன்றரை மணி நேரத்தில் 1,111 அம்புகளை எய்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு பெரும்பாலும் தனது இலக்கைத் துல்லியமாக தாக்கும் விதமாகவே அம்புகளை எய்தார்.

இது குறித்து பேசிய சிறுமி சஞ்சனா, “ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு” எனக் கூறியுள்ளார்.
சஞ்சனா நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று அவரது பயிற்சியாளர் ஷிஹான் ஹுசேனியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சஞ்சனா ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்போவதில் சந்தேகமே இல்லை. மத்திய, மாநில அரசுகள் சஞ்சனாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்துதர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சஞ்சனாவின் பெற்றோரும் தங்கள் மகள் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதையே எதிர்நோக்கியுள்ளனர். இந்த கின்னஸ் சாதனை முயற்சிக்காக கடந்த 3 மாதங்களாக பள்ளி முடிந்ததும் பயிற்சி மேற்கொண்டாள் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி