ஆப்நகரம்

எண்ணூர் துறைமுகத்தில் மாசடைந்த கடல்நீரை அகற்றும் பணி தீவிரம்

எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கலந்த டீசல் எண்ணெயை அகற்றும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

TNN 31 Jan 2017, 11:39 am
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கலந்த டீசல் எண்ணெயை அகற்றும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil 56 hours on ill equipped workers struggle to contain chennai oil spill
எண்ணூர் துறைமுகத்தில் மாசடைந்த கடல்நீரை அகற்றும் பணி தீவிரம்


கடலில் கவிழ்ந்த 2 டன் டீசல் எண்ணெயை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாசுப்பட்ட கடல்நீரை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது எண்ணூர் துறைமுகப் பகுதியில் மாசடைந்து காணப்படும் கடல் பகுதியை திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு நடத்தி வருகிறார்.

கடலில் கலந்துள்ள டீசல் எண்ணெயால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் ஆமைகள், மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும், இதன் காரணமாக நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அச்சத்தில் திருவொற்றியூர் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கடந்த 27ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 கடல் மைல் தூரத்தில் வந்த 2 கப்பல்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் சேதம் அடைந்து, டீசல் கடலில் கொட்டியது. இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் மற்றும் சென்னை கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர படையினர் விரைந்து வந்து 2 கப்பல்களையும் மீட்டனர்.

இந்த விபத்தில் கடலில் டீசல் கொட்டியதால் கடல்நீர் முழுவதும் எண்ணெய் கலந்து எண்ணூர், திருவொற்றியூர், எர்ணாவூர் கடற்கரை முழுவதும் டீசல் படிந்து காட்சி அளிக்கிறது. திருவொற்றியூர் கடற்கரையில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோர கற்களில் டீசல் படிந்து உள்ளது. மேலும், இது தற்போது திருவான்மியூர் கடல் பகுதி வரை பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று எண்ணூர் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருவதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Dead turtles and fish floated on the sea at Ernavur, near Ennore, a day after the fuel tank of an oil tanker ship burst following a collision with an LPG carrying vessel.

அடுத்த செய்தி