ஆப்நகரம்

அரிவாளால் தாக்கப்பட்ட சென்னை காவலர் கவலைக்கிடம்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்.

Samayam Tamil 3 Jul 2018, 4:17 pm
ஆறு பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்.
Samayam Tamil chennai-rain-ips


சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ராஜவேலு (35), கடந்த திங்களன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது வந்த புகாரின் அடிப்படையில் குடிசை வாரியம் அருகே விரைந்தார். அங்கு மதுபோதையில் 6 பேர் இளம் பெண்ணிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த காவலர் ராஜவேறு, அந்த ஆறு பேரையும் அதட்டினார். அங்கியிருந்து சென்றுவிடும் படியும் கூறி எச்சரிக்கை செய்தார்.

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் ராஜவேலு


குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தின் மூலம் காவலர் கிளம்புபவதை பார்த்த அந்த 6 பேர் அரிவாளால் ராஜவேலுவை தாக்கினர்.

இதனால் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அந்த ஆறு மர்ம நபர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியை கடந்த சென்ற சிலர், காவலர் ஒருவர் தாக்கப்பட்டு மயங்கி நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளதால் ரத்த அதிகமாக வெளியேறியுள்ளது. இதனால் காவலர் ராஜவேலு உயிருக்காக போராடி வருகிறார்.

காவலர் ராஜவேலுவை தாக்கியது யார் என்பது தொடர்பான விசாரணையை சென்னை காவல் துறை முடுக்கிவிட்டுள்ளது.

அடுத்த செய்தி