ஆப்நகரம்

சென்னையில் மாணவர் தற்கொலை... ஆன்லைன் வகுப்பு காரணமா?

மாணவனின் செல்ஃபோனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே ஆன்லைன் வகுப்புதான் காரணமா என்பது தெரிய வரும்.

Samayam Tamil 17 Sep 2020, 11:14 am
சென்னை, பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


சென்னை செம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஜெய் கார்த்திக். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.45 மணிவரை ஆன்லைன் வகுப்பில் கார்த்திக் படித்துள்ளார்.

இவரது தாய் சுந்தரிக்கு உடல் நலம் சரியில்லாததால் கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார்த்திக் வீட்டின் வராண்டாவில் சேலையால் மின்விசிரியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

ஆன்லைன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவே முதல்கட்ட விசாரனையில் கூறப்படுகிறது. எனினும் தற்பொழுது மாணவனின் செல்ஃபோனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே ஆன்லைன் வகுப்புதான் காரணமா என்பது தெரிய வரும்.

13 மாணவர்கள் தற்கொலைக்கு திமுகதான் காரணம்: எடப்பாடி ஆவேசம்

கார்த்திக் வழக்கமாக நன்றாக படிக்கும் மாணவன் .அதே போல விளையாட்டிலும் ஆர்வமாக பங்கேற்றுள்ளான். ஆனால் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என புலம்பிய அந்த மாணவன் கார்த்திக் நேற்று மாதாந்திர தேர்வு எழுதவுள்ளதாக தன் பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

தூக்குப்போட்டுக்கொண்ட இடத்தில், பேப்பர் பந்துபோல் சுருட்டி வீசப்பட்டு கிடந்ததையும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் பதிவு செய்துள்ளனர். இதனைப் பார்க்கும் போது ஆன்லைன் தேர்வு எழுதும்போது எதேனும் பிரச்சனை ஏற்பட்டு பேப்பர்களை வீசி இருக்கலாம் அல்லது உச்சகட்ட மன அழுத்தத்தின் விளைவாக அபப்டி வீசியிருக்கலாம் என தெரிகிறது என்றும் போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி