ஆப்நகரம்

6 வயது சிறுவன் வேலையா இது?; நம்ப முடியலையப்பா!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.1000 அளித்துள்ளான். பள்ளி சிறுவன் செயலை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 15 May 2021, 1:22 pm
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. இது, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில தினங்களாக இந்நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் மற்றும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
Samayam Tamil சிறுவன் ரோஹித்
சிறுவன் ரோஹித்


இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களை பாதுகாக்கும் இதுபோன்ற உன்னதமான பணிக்கு நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது மகன் ரோஹித் என்ற 6 வயது சிறுவன் தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.1,000 பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளான்.

யாருக்கு ரூ2. ஆயிரம் கிடைக்கும்?; தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

அதே பகுதியில் முதலாம் வகுப்பு படித்து பள்ளி சிறுவன் ரோஹித்தின் செயலை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இளம் பருவத்திலேயே இதுபோன்ற நாட்டுப்பற்று உள்ள சிறுவனின் செயல்பாடு நாளைய தூண் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி