ஆப்நகரம்

kasimedu: காசிமேட்டில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைப்பு

காசிமேட்டில் தற்காலிகமாக மீன் மார்க்கெட் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 5 Jun 2020, 9:28 am
சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தற்காலிகமாக புதிய மீன் விற்பனைச் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil kasimedu market construction


கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் கடந்த 3 மாதமாக கடலுக்குச் செல்லாமல், அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் சரீர இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மீன் விற்பனைச் சந்தையும் மூடப்பட்டது.

பெரிய ரக மோட்டார் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், சிறிய ரக மீன்பிடி படகுகளான வல்லம் உள்ளிட்டவை கரையோர மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தன, இருப்பினும் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் மீன்பிடிக்கத் தயாராகி வரும் நிலையில், தற்காலிகமாக ஒரு மீன் விற்பனைச் சந்தையை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்குட்பட்ட பகுதியில் அரசு அமைத்து வருகிறது.
சுமார் 150 விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடிய அளவில் இந்த தற்காலிகச் சந்தை அமைக்கப்படுகிறது. மேலும் மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன.



சரீர இடவெளியைக் கடைபிடித்தபடி மீன் விற்பனை நடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி