ஆப்நகரம்

கொரோனாவை அழிக்க சென்னை விமான நிலையத்தின் சூப்பர் ஐடியா!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க புற ஊதாக் கதிர் கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jul 2020, 8:52 am

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு கருதி பல்வேறு கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil சென்னை விமான நிலையம்


இந்நிலையில், பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புற ஊதாக் கதிர்களை பயன்படுத்தி கொரோனாவை அழிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை விமான நிலையத்தில் புற ஊதாக் கதிர் கருவிகள் (ultraviolet germicidal irradiation) பொருத்தப்படவுள்ளன.

சென்னையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம்?!

தற்போது விமான சேவைகளை கையாளும் முனையங்களில் மட்டும் புற ஊதாக் கதிர் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. பயணிகள் வந்துபோகும் இடங்களில் உள்ள காற்றில் வைரஸ், பேக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளை அழிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புற ஊதாக் கதிர்கள் நுண்ணுயிரிகளின் டிஎன்ஏவை தாக்கி அவற்றை அழித்துவிடும். இதன் விளைவாக விமான முனையங்களில் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்க முடியும். பொதுவாக மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களில் மட்டுமே புற ஊதாக் கதிர் கருவிகள் பொருத்தப்படும்.

தமிழ்நாடு ராஜ் பவன்: 76 சிஆர்பிஃப் வீரர்களுக்கு கொரோனா!


சென்னை விமான நிலையத்திற்கு புற ஊதாக் கதிர் கருவிகளை வாங்கவும், பொருத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சுமார் இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றனர். ஊழியர்களோ ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் செலவழிக்கின்றனர்.

உள்நாட்டு விமான முனையத்தில் தினசரி 5,000 பயணிகள் வந்துபோகின்றனர். ஆகையால், இந்த நெருக்கடி சூழலில் கோவிட்-19 அச்சுறுத்தலை குறைக்கும் வகையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இப்புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அடுத்த செய்தி