ஆப்நகரம்

அண்ணா சாலையில் கார் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!!

அண்ணா சாலையில் கார் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!!

TOI Contributor 15 Mar 2017, 10:23 am
சென்னையின் பரபரப்பான சாலையான அண்ணா சாலை பகுதியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே, சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த கார் சாலையோரம் இருந்த சுவரில் மோதியுள்ளது. இதில் கார் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.
Samayam Tamil accident near us embassy and driver was injured
அண்ணா சாலையில் கார் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!!


காலை அலுவலக நேரம் என்பதால் மிகவும் பரபரப்புடன் காணப்படும் அண்ணா சாலை பகுதியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனத்துடன் வந்த காவல்துறையினர் உடனடியாக விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே சர்ச் பார்க் பள்ளி இருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி