ஆப்நகரம்

இன்னொரு ரவுண்டு போலாமா..? கமல், சீமானை அழைக்கும் கருணாஸ்

தமிழர்களின் நலன் காக்கப்பட கமல் ஹாசனும், சீமானும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2021, 8:37 am

ஹைலைட்ஸ்:

  • கமல் ஹாசனை கருணாஸ் இன்று சநதித்தார்.
  • இருவருக்கும் இடையேயான சநதிப்பு 2 மணி நேரம் நீடித்தது.
  • கமலும், சீமானும் அரசியலில் இணைந்து பயணிக்க வேண்டுமென கருணாஸ் விருப்பம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கருணாஸ்
தமிழக அரசியலில் கமலும், சீமானும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று கருணாஸ் விருப்பம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனை, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வீட்டில் வளர்ந்தவன் என்ற முறையில், அவரால் வளர்க்கப்பட்ட மாணவன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் நீதி மய்யம் 10 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.

''முதல் கையெழுத்து நீட் தடை''... ஏழை மாணவர்கள் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள்?

வரும் காலங்களில் லஞ்ச, லாபமற்ற ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் இத்தேர்தலில் மொத்தம் 40 லட்சம் வாக்குகளை பெற்றன. இந்த வாக்குகள் வருங்காலத்தில் ஒரு கோடியை தாண்டும்.

தமிழர்களுடைய நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் கமல் ஹாசனும், சீமானும் உறுதிபட இருப்பதால், இருவரும் இணைந்து பயணித்தால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்கள்தான் ஆகிறது. இந்த அரசின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கருணாஸ் கூறினார்.

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று களமிறங்கிய கமல்ஹாசனே தனது தொகுதியில் வெற்றி பெறமுடியாமல் போன நிலையில் கருணாஸின் இந்த புதிய கூட்டணி முயற்சி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

அடுத்த செய்தி